பாகிஸ்தானில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 107 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், இந்த விபத்தில் பிரபல மொடல் சாரா அபிட் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், ஒன்று, இன்று லாகூர் நகரிலிருந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் கராச்சி நகருக்கு புறப்பட்டு சென்றது.
விமானம் தரையிரங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கிருக்கும் காலனி குடியிருப்பில் விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இடுபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
It has been confirmed that the Model & Actress Zara Abid hasn't survived the #PK8303 #PIA Plane Crash. Such tragic news! Heartfelt Condolences to her family and friends.#PIACrash #ZaraAbid #planecrash pic.twitter.com/cj2In4gccq
— Zain Khan (@ZKhanOfficial) May 22, 2020
ஆனால், விமானத்தில் பயணம் செய்த சிலர் உயிருடன் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல மொடல் Zara Abid இந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
Heart broken about Zara Abid. Just cancelled a shoot for Nomi Ansari for @catwalk_cares show. Everyone in tears. Prayers for survivors & deceased and waiting for news. #PIA_Plane_Crashed #zaraabid @NOMIANSARI pic.twitter.com/7aimpB5Qxi
— Frieha Altaf (@FriehaAltaf) May 22, 2020
ஆனால், Zara Abid-க்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் அவர் இறந்துவிட்டதாகவும், அது உறுதியாகவிட்டதாக கூறி, டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
பிரபல் ஊடகவிலயளாரான Zain Khan தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குறித்த விமான விபத்தில் Zara Abid இறந்துவிட்டது உறுதி, அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விமானத்தில் Zara Abid பயணம் செய்துள்ளதாகவும், பயணிகளின் பட்டியலில் அவரின் பெயர் இருப்பதாகவும், இது ஒரு இதயத்தை உலுக்கும் செய்தி, என்று சிலர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.