சீனாவில் மோசடியில் ஈடுபட்ட கனடாவின் வாங்சகூவார் பகுதியைச் சேர்ந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை திட்ட நிறுவனங்களிடம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு சுமார் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்து உள்ளது.
வாங்கூவரைச் சேர்ந்த கிறிஸ்டோர் லீ என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பிய நீதிமன்ற நீதிபதி நீனா சர்மாவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வீட்டு மனை நிறுவன உரிமையாளர் சொல்லிட்டேன் இந்த கனடிய பேச்சை மோசடி செய்துள்ளதாகவும் அவர்களிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஹைனான் தீவுகளில் வீட்டுமனை திட்டமொன்றை முன்னெடுப்பதாக கூறி முதலீடுகளை திரட்டி மோசடி செய்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.