100 க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் 5 வது மாடியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் ஹொக் சான் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹோட்டலில் 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஹோட்டலின் 5வது மாடியில் உள்ள அறையில் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.