2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு பலத்த காற்று மற்றும் கன மழையால் தாக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து இங்கிலாந்தில்(UK) பல முக்கிய இடங்களில் புத்தாண்டு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக எடின்பரோவின்(Edinburgh) சில ஹோக்மனே கொண்டாட்டங்கள் வானிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், பிளாக்பூல் நகரில் திட்டமிடப்பட்ட வானவேடிக்கைக் காட்சிகள் அதிக காற்று காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர நாட்டின் கடலோர பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சியும் அதிக காற்று வீசும் என்ற முன்னறிவிப்பின் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதியும் திங்கள் மற்றும் புதன் இடையே பல வானிலை அலுவலகங்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் காற்று மற்றும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையுடன் உள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கும் புயல் நிலைகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.