திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்திலுள்ள விகாரையொன்றுக்குள் நுழைந்து கணினி மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூரை மேல் ஏறி உள் நுழைந்து குறித்த பொருட்களை திருடி சென்றதாக நேற்று மாலை கந்தளாய், 94ஆம் கட்டை – சைலாறாம விகாரையின் விகாராதிபதி அஸ்கிரிய புஞ்யரத்ன தேரர் பதிவு செய்துள்ளார்.
இதன்போது ஒரு இலட்சத்து 23 ஆயிரம் ரூபா பணத்தையும் மடிகணினி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த சொக்கோ பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குறித்த இடத்தைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அடையாளங்களை இட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்