தமிழ்நாட்டில் பல பெண்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசி, என் உடல் பிடிக்க போய், அவர்கள் என்னிடம் விழுந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது மதிக்க காசி என்ற இளைஞன் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி, அவர்களுடன் நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படம், மற்றும் வீடியோக்களை வைரத்து மிரட்டி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவன் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட பின் அவனைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இவன் மீது நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் உள்ளன. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் இவன் மீது புகார் தந்துள்ளனர்.
குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ள, காசியை பொலிசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவன் வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில் காசியின் லேப்டாப்பில் பல பெண்களுடன் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன.
இதனால் இதை எல்லாம் விசாரிக்கவும், இவன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து அறியவும், பொலிசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில், காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, இப்போது 2-வது முறை 6 நாட்கள் பொலிஸ் காவலில் விசாரணை துவங்கியது.
நேற்றுமுன்தினம் முதல்விசாரணை நடந்தது. வழக்கம்போலவே இந்த 2 நாளிலும் காசி வாயை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பின், லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களை காட்டி, இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பென்டிரைவரில் உள்ள நிர்வாண வீடியோ, புகைப்படங்களை காண்பித்து, அந்த பெண்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இதை எல்லாம் பார்த்தவுடன் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல், எத்தனையோ பெண்கள் என்னிடம் ஜாலியா பழகி இருக்கிறார்கள்.
அதெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது. நானாக சென்று அவர்களை ஏமாற்றவில்லை. என் கிட்ட வந்தவர்களிடம் நான் ஜாலியாக இருந்தேன். கொஞ்சம் பண தேவை இருந்தது. அதன் காரணமாக சில பெண்களின் நட்பை பயன்படுத்தி கொண்டேன்.
அதற்காக நான் எந்த ஒரு பெண்ணையும், திருமணம் செய்து ஏமாற்றவில்லை. என் பேச்சு, என் உடம்பு அவர்களுக்கு பிடித்திருந்தது. அதை பார்த்து என்கிட்ட விழுந்துட்டாங்க. நானா அவர்களை ஏமாற்றினேன், தேவையில்லாமல் என் மேல் யார் புகார் கொடுத்தார்களோ, அவர்களை அழைத்து முதலில் விசாரிங்கள் என்று சாதரணமாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
அந்த லேப்டாப்பில் இருக்கும் பெண்களை தொடர்பு கொண்டு பொலிசார் விசாரிக்க முயன்றால், அவர்கள் பேச மறுக்கிறார்களாம். ஏனெனில், பெரும்பாலானோர் சிறுவயது பெண்கள், மீதி உள்ளோர் குடும்ப பெண்கள் என்பதால், அவர்கள் காசி பற்றி எதையும் சொல்ல பயப்படுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் 4 நாட்கள் விசாரணை மீதமுள்ளதால், நிச்சயமாக ஏதேனும் ஒரு விஷயத்தை காசியிடம் இருந்து பிடுங்கிவிடலாம் என்று நம்பியிருந்தனர்.
ஆனால் மாதர் சங்கத்தினர், காசியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியே ஆகவேண்டும் என்று கோரிக்கை வைத்ததால், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வழக்கில் பல உண்மைகள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.