பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றியடைய 50% மட்டுமே வாய்ப்பு உள்ளது என சோதனையை இணைந்து வழிநடத்தும் பேராசியர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனாவல் 36,675 பேர் பலியாகியுள்ளனர், 2,57,154 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் படிப்படியாக குறைந்து வருவதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றியடைய 50 சதவிகிதம் மட்டுமே வாய்பு உள்ளது என தடுப்பூசியின் சோதனை இணைந்து நடத்தும் பேராசிரியர் தெரிவித்தார்.
தடுப்பூசியை உருவாக்க மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி உடன் இணைந்து செயல்பட்ட ஆக்ஸ்போர்டின் ஜென்னர் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அட்ரியன் ஹில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் கொரோனா பரவுதல் குறைவாக இருப்பதால் 10,000 தன்னார்வலர்களை உள்ளடக்கிய வரவிருக்கும் சோதனையில் பலன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது வைரஸ் மறைந்து போவதற்கும் மற்றும் நேரத்திற்கும் எதிரான போட்டி என்று ஹில் கூறினார். இந்த நேரத்தில், எங்களுக்கு எந்த சத்தியமான முடிவும் கிடைக்க 50 சதவிகித வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.