பாதாள உலக குழுத்தலைவர்களில் ஒருவரான கொஸ்கொட தாரகவின் உதவியாளரான மானா என்று அழைக்கப்படும் மனோஜ் ஹர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து 200 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 2.5 மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
25 வயதான அவர் நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட “மானா” தற்போது சிறையில் இருக்கும் கொஸ்கொட தாரக மற்றும் ககன ஆகியோரின் பிரதான போதைவஸ்து விநியோகஸ்தராக செயற்பட்டுள்ளார்.
ஏற்கனவே கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட “மானா” பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.