கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதினாலும் ஊரடங்கு காரணமாகவும் இந்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இம்மாதம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை உறுதிசெய்வதற்காக சந்தர்ப்பத்ததை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் உள்ளிட்டோரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.