ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா (வயது 48) என்பவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா தோட்ட தேயிலை மலையில், தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரமொன்றில் இருந்த குளவிக்கூடுமீது கழுது மோதியதாலேயே குளவிகள் கலைந்துவந்து தொழிலாளர்களை சரமாரியாக தாக்கியுள்ளன.
மேலும் இரண்டு ஆண் தொழிலாளிகள் உட்பட எட்டு பேர் குளவிக்கொட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.