ஸ்ரீலங்காவில் அடுத்து வரும் நாட்களில் மழையுடனான காலநிலை ஏற்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு ஆபத்துக்கள் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண் சரிவு ஏற்படும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பல பகுதிகளில் அடைமழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நீர்நிலைகளக்கு அருகில் உள்ளவர்கள் வெள்ள நிலை தொடர்பில் அவதாமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



















