திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து மரணமானார்.
இந்த துயரசம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை அம்பியுலன்ஸ் வாகனம் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.