ஆறுமுகம் தொண்டமான் அவர்களது இழப்பு மகிந்த ராஜபக்ச அவர்களது அரசியலில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
அவரது ஆதரவு கடந்த காலங்களில் மகிந்தவுக்கு பெரும் பலமாக இருந்தது. இலங்கை அரசியல் ஆட்சி மாற்றங்களுக்கு மலையக வாக்குகள் எப்போதுமே முக்கியமான வகி பாகமாக இருந்து வந்தன.
ஆட்சி மாற்றத்தை தீர்மானிப்பதே மலையக வாக்குகள் எனும் நிலை அனைவராலும் உணரப்பட்டதொன்றுதான். இனிவரும் காலங்களில் அது கேள்விக் குறியாக இருக்கும்.
ஆறுமுகம் தொண்டமானுக்கு பின்னர் கட்சியை பலமாக நடத்த ஒரு கரிஸ்மா (வசீகரிக்கும்) முகம் மலையக காங்கிரசில் இல்லை.
அவர் இன்னொரு தலைமையை உருவாக்கவும் இல்லை. அதற்கு காரணம் இத்தனை இளமையான வயதில் அவர் இல்லாமல் போவார் என அவரோ அல்லது அவரது அரசியல் சகாக்களோ சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.