கொரோனா வேளையில் சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்களை NDTV.COM வெளியிட்டுள்ளது.
செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை NDTV வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் இராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6 திகதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை காட்டுகிறது. இரண்டாவது மே 21ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமான பணிகள் நடப்பதை காணமுடிகிறது.
மூன்றாவது படத்தில், இராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
முன்னதாக இந்தியா சீனாவிடையே 1999ல் ஏற்பட்ட கார்கில் போரில் பல வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.