இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமாகிய தம்பி ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு செய்தி கேட்டு மிகுந்த துக்கத்திற்கு உள்ளானேன். இந்த திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து இன்றையதினம் அவர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரது அனுதாப செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
எனக்கும் அவருக்கும் நீண்டகால உறவு இருக்கின்றது நான் எனது அரசியலை அவரது தாத்தாவான சௌவியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனே ஆரம்பித்தேன். ஐயாவின் இறப்பிற்கு பின்னர் எனக்கு மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை பெற்றுக் கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களே.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்களை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இருந்தும் இவரையோ இவரின் குடும்பத்தையோ ஐயா அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையோ விமர்சித்தது கிடையாது. இவர்களுக்கு என்று ஒரு மரியாதை என்னிடம் இருந்நது.
தற்போது இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் உட்பட அவரது விசுவாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவரது இறுதி கிரிகைகள் மலையத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அராங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து நடடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். மலையத்தில் தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்கம் மற்றும் கட்சி பேதங்கள் இன்றி அவருக்கான மறியாதையை அனத்து மக்களும் செலுத்த வேண்டும்.
இவரது இறுதி கிரிகைள் முடியும் வரை மலையகத்தில் துக்கத்தினம் அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.