கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், நாட்டை திறப்பதற்கும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க பாராட்டியுள்ளார்.
வேலை சிறப்பாக செய்யப்படும் போது பாராட்டத்தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில், ஸ்ரீலங்காவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இதனாலேயே வணிகத்திற்காக கொழும்பு நகரத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்றார்.