மெல்பேர்ன் Monash நெடுஞ்சாலையோரம் நபர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் மெல்பேர்ன் Dandenong North பகுதியில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றதாக பொலீஸார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
Monash நெடுஞ்சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு குழப்பமான மனநிலையுடன் நின்றுகொண்டிருந்த நபரை பொலிஸார் அவதானித்துவிட்டு அவரை அணுகியபோது,
அவர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து மிரட்டினார் என்றும் – கத்தியை கைவிடுமாறு அவரை சமாதானம் செய்து அருகில் செல்வதற்கு முயன்றபோது திடீரென்று கத்தியால் பொலிஸாரை தாக்குவதற்கு முயற்சித்ததாகவும்,
அப்போது அவது நெஞ்சில் இரண்டு தடவைகள் பொலீஸார் சுட்டதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மெல்பேர்ன் Narre Warren பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.