யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி பொலிஸார் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.