பிஜுமோல் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் பெயர் ஸ்ரீஜித். இருவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீஜித் அரபு நாடுகளில் 13 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
பின்னர் தனக்கு ஏற்பட்ட உ டல் நலக்குறைவால் நாடு திரும்பி தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீஜித்திற்கு எலும்பு புற்று நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
இதனால் குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலையை அடைந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது மனைவி பிஜுமோல் சுற்றுலா விசாவில் தரகர் ஒருவர் மூலமாக துபாய் சென்றிருக்கிறார்.
துபாயில் அவருக்கு ஆயுர் வேத மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் சென்று பணியாற்றும்ப டி கூறியிருக்கிறார்.
அந்த சூழ்நிலை பிடிக்காத பிஜுமோல் தன்னுடைய வேலையை விட்டு நின்றுவிட்டார். பின்னர் தரகரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரால் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றத்தில் பிஜுமோல் தன்னுடைய தோழி ஒருவருடன் அறையில் தங்கி வேறு வேலையை தேடிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் அவருடைய சுற்றுலா விசாவும் முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் சட்ட விரோதமாக அந்த நாட்டில் தங்கக்கூடிய சூழ்நிலைக்கு பிஜுமோல் ஆளாகியிருக்கிறார்.
இதனையடுத்து அவரின் தோழியும் ஊர் திரும்பி விட்டார். தனியாக பிஜுமோல் துபாய் நாட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இன்னிலையில் பிஜுமோலின் நிலமையை பற்றி அறிந்த இந்திய தூதரகம் அவருக்கு நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிஜுமோலும் தன்னுடைய குழந்தைகளை பார்க்க இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
நாடு திரும்பினாலும் தன்னுடைய சொந்த மகளை பார்க்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார் பிஜுமோல்.
இந்த சம்பவம் கேட்போரின் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது என்று தான் கூற வேண்டும்.




















