வட தமிழீழம், யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மோட்டார் வெடி மருந்துகள் உட்பட பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் கிணத்தை சுத்தப்படுத்தும் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே இவை மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தக் கிணற்றில் இருந்து 81 மில்லி மீற்றர் நீளம் கொண்ட மோட்டார் வெடிபொருள் 50 உம் 60 மில்லி மீற்றர் நீளம் கொண்ட மோட்டார் வெடி பொருள் 33ம் 6 தோட்டாக்களும் 12 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வெடிபொருட்கள் யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.