இந்தியாவில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் Sonoura கிராமத்தின் குறிப்பிடட்ட இடத்தில் கடந்த 25-ஆம் திகதி, வீடு கட்டுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டுள்ளது.
அப்போது அங்கிருந்த மண்ணின் உள்ளே பிஞ்சு குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதை, அங்கு வேலை பார்த்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதியை தோண்டி பார்த்த போது, குழந்தை உயிருடன் இருந்ததால், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள், வாயில் மட்டும் மண் போய் உள்ளது. மற்ற படி குழந்தையின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை யார்? தாய் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.