பிரபல நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தனிப்பட்ட முறையில் பெருமளவில் உதவி செய்த நிலையில் அவரை சுரேஷ் ரெய்னா மனதார பாராட்டியுள்ளார்.
தமிழில் நெஞ்சினிலே, தேவி, ஒஸ்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள சோனு பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார்.
சோனு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தனிப்பட்ட முறையில் பெருமளவில் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கருவிகளையும் வழங்கியிருப்பதுடன் மும்பையில் தனக்கு சொந்தமான இடத்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்.
அவரை பலரும் பாரட்டியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனு சூட் மேற்கொள்ளும் காரியங்கள் பிரமிக்கத்தக்கவை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.