கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக்கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் கொரோனா பரவக்கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில, ஆய்வு கூட ஊழியர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, குரங்குகள் அவரை தாக்கின.
அத்துடன் அவரிடமிருந்து 4 பேரின் ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் குரங்குகள் தூக்கிச்சென்றன.
இந்த நிலையில் குரங்குகள் 4 பேரின் ரத்த மாதிரிகளும் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்குரங்குகள் பறித்துச் சென்ற மாதிரிகளை மரத்தின் மீது அமர்ந்து கடிக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்தால் குரங்குகள் கொரோனாவை பரப்பும் என்ற அச்சத்தில் மீரட் நகர மக்கள் உள்ளனர்.
இதேவேளை இக்குரங்களின் உடலில் மேற்படி இரத்தம் பட்டால் குரங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுமா என்பது தெளிவில்லை எனவும் மீரட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.கே. கார்க் தெரிவித்துள்ளார்.