எகிப்தை சேர்ந்த தம்பதி திருமணம் முடிந்த நான்கு நாட்களில், 10 நாட்கள் ஹனிமூன் வந்த நிலையில், தற்போது அது இரண்டு மாதங்களாக மாறியுள்ளது.
துபாயில் நீண்ட காலமாக வசிக்கும் எகிப்தை சேர்ந்தவர்கள், Peri மற்றும் Khaled. இவர்கள் இருவரின் திருமணமும், கடந்த மார்ச் மாதம் 4-ஆம் திகதி தலைநகர் Cairo-வில் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இவர்கள் ஹனிமூனுக்காக எகிப்து முதல் மெக்சிகோ வரை என்று 10 நாட்கள் திட்டமிட்ட படி சென்றுள்ளனர்.
ஆனால் தற்போது இந்த தம்பதி, எகிப்து முதல் மெக்ஸிகோ வரை மட்டுமின்றி இஸ்தான்புல், சிறிய தீவு நாடான மாலத்தீவு என முடிவில்லாத தேனிலவில் சிக்கி தவிக்கின்றனர்.
அதிகரிக்கும் பணத்தேவை, கிரெடிட் கார்டு பில்கள், அதுமட்டுமின்றி தங்கள் வேலையை தக்க வைத்து கொள்ளவும் போராடி வருகின்றனர்.
அதாவது இந்த தம்பதி ஹனிமூன் பயணங்களில் ஒன்றான கடந்த மார்ச் மாதம் 19-ஆம் திகதி அவர்கள் துருக்கிக்கு ஒரு விமானத்தில் ஏறினார்கள்.
அங்கு துபாய் செல்லும் வழியில் பஹ்ரைனுக்கு இணைக்கும் விமானம் இருந்தது. விமானத்தில் இருந்த போது, ஐக்கிய அரபு அமீரகம் குடிமக்கள் அல்லாதவர்கள் நுழைவதை இந்த கொரோனா வைரஸ் காரணமாக தடை செய்கிறது என்ற தகவலை இவர்கள் பெறுகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் தரையிரங்கினர். அதன் பின் அவர்களால் இஸ்தான்புல் உள்ளேவும் நுழைய முடியவில்லை, அதிகாரிகள் பல்வேறு தகவல்கள்(போர்டிங் பாஸ் போன்றவை) போன்றவைகளை கேட்டுள்ளனர்.
இதில் திருப்தி அடையாத அதிகாரிகள் அவர்களை இஸ்தான்புன் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் எகிப்து குடிமக்களை விசா மூலம் இலவசமாக அனுமதிக்கும் நாடு, தீவு எது என்பது குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.
அப்போது, மாலத்தீவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவர, இந்த தம்பதி உடனடியாக மாலத்தீவிற்கு செல்வதற்கான விமானத்தில் அங்கு சென்றனர். அங்கு சென்ற பின் அடுத்த 48 மணி நேரத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்த போது, தற்போது அது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தொலைதொடர்பு பொறியியலாளரான Khaled மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநரான Peri இருவரும் தேனிலவு தங்களுக்கு நீண்ட காலமாகிவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

மேலும், இந்த தம்பதி எகிப்திற்கு திரும்பி செல்வது குறித்து யோசித்துள்ளனர். ஆனால் விமான டிக்கெட்டுகளின் விலை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் போன்றவைகளால் இவர்கள் பயந்துள்ளனர், அதுமட்டுமின்றி எகிப்தில் காலவரையின்றி விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், மாலத்தீவை இவர்கள் தெரிவு செய்து தங்கி வருகின்றனர்.
இது எகிப்தின் தலைநகர் கெய்ரோவை விட மிகவும் பாதுகாப்பானது அவர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த தம்பதியினர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தங்களுக்கு அனுமதி வழங்க உதவுவார்கள் என்று நம்புகிறார்கள், திரும்பி செல்வதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய இவர்கள் தயாராக இருக்கின்றனர்.
இவர்கள் துபாய்க்கு மிகவும் புதித்து என்பதால், குறித்த நாட்டில் புதிய வேலை, புதிய வீடு, மனிதர்கள் என்றும் இன்னும் எதையும் பார்க்கவில்லை என்பதால், Khaled துபாய்க்கு எப்போது செல்வோம் என்று எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.