கொரோனாவை மறந்து, ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கினை மீறி பெருமளவானவர்கள் நேற்று திரண்டிருந்ததானது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இறுதிசடங்கில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வதால் நாடு முழுவதுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து தமது பிராந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது கடற்படையினரின் மத்தியிலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மத்தியிலும் மாத்திரம் கொரோனா வைரஸ் காணப்படுகிறது.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காவிட்டால் இரண்டாம் சுற்று ஆபத்து உருவாகலாம்.
சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, எனினும் சிரேஸ்ட அமைச்சர்களின் இறுதிசடங்குகள் இடம்பெறும் இடங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதால் ஆபத்துக்கள் உருவாகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.