சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நியமனம் தொடர்பான இறுதி தீர்ப்பு ஆவணி மாதம் 1 ஆம் திகதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுமென திறந்த நீதிமன்றத்தில் இவ்வாரம் திருகோணமலை மாவட்ட மேல் நீதீமன்ற நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
அன்றையதினம் கட்சிக்காரர்கள் , அவர்களுடைய சட்டத்தரணிகள் மற்றும் அரச சட்டத்தரணிகள் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுளள்னர்.
ஏற்கனவே தீர்ப்பிற்கான திகதி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் இறுதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 1 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் , முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லாவிற்கு பதிலாக கட்சிக்காரராக இணைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பின் மூலம் கிழக்கு மாகாணத்தின் புதிய கல்விப்பணிப்பாளர் மன்சூரா ?,நிஸாமா? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ள நிலையில் இத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.