புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த பகுதியில் உள்ள சிறுவனை இன்று (31) காலை 9.00 மணி முதல் காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் எம். உமர்டீன் என்ற சிறுவனே காணாமல் போய் உள்ளான்.
இன்று காலை 9.45 மணி அளவில் இந்த சிறுவனை புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் கண்டதாக ஒருவர் தகவல் வழங்கி உள்ளார். சி.சி.ரிவி கமராவிலும் சிறுவனின் காட்சி பதிவாகியுள்ளது.
இருந்தும் இது வரைக்கும் சிறுவன் கிடைக்கவில்லை. சிறுவனை கண்டவர்கள் 0773897885, 0774166992 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.