திருச்சி நகரில் பெண்கள் குளிக்கும் நேரத்தில் வீடியோ எடுத்த சம்பவம் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் ஜானகி ராமன். இவருக்கு சொந்தமாக விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியை நடத்தி வந்த நிலையில், விடுதியில் பெண்கள் தங்கியிருந்து வந்துளளனர்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக விடுதியில் குறைந்தளவு பெண்கள் தங்கியிருந்துள்ளனர். காமுக எண்ணத்தை கொண்ட ஜானகிராமன், பெண்கள் குளிக்கும் சமயத்தில் வீடியோ பதிவு செய்துள்ளான்.
இந்த விஷயம் பெண்களுக்கு தெரியவந்த நிலையில், இந்த விஷயம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், காமுகன் ஜானகிராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.