இரு மனங்களும் சங்கமிக்கும் பெயர் தான் காதல். காதல் உணர்வுகள் மிகவும் அழகான ஒன்று. ஒருவருடைய காதல் புனிதமானதாக இருக்க உணர்வுகளின் கட்டுப்படுத்தலில்தான் உள்ளது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பிரேக் அப் நிறைய நடக்கிறது. ஒருவருயொருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டுக்கொடுத்தல் இல்லாமலும், குடும்ப சூழ்நிலையாலும் பலர் காதல் ஜோடிகள் பிரிந்து விடுகிறார்கள்.
தற்போதைய சமூகத்தில் ஒரு காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி தங்களுடைய மன நிலைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது ஒரு பேஷனாக மாறிக்கொண்டு வருகிறது.
இந்த மாதிரியான ரொமான்டிக் போஸ்டர்களும், பிரேக்அப் கவலைகளும் எதற்காக மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று யாருமே நினைக்கிறது இல்லை.
பொதுவாக காதல் ஜோடிகளுக்கு இடையே பிரேக்அப் என்று வரும் போது நிராகரிப்பு, சந்தேகம் போன்ற குணங்கள் வேட்டையாடத் தொடங்கி விடுகின்றது.
பிரேக் அப்பிற்கு பிறகு நிறைய காதல் ஜோடிகள் தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.
மேலும் அவர்கள் மதிப்பற்றவர்களாகவும், அன்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். காதல் பிரேக்அப் ஏற்பட்ட உடனே வாழ்க்கையே போய் விட்டது என்று மன அழுத்தத்தில் மூழ்கி விடுகின்றனர்.
பிரேக் அப் ஆனதும் உணர்வுகளை கட்டுக்குள் இருக்க வேண்டும். உங்களை அந்த உணர்வுகள் ஆட்கொள்ள விட கூடாது. இல்லையென்றால் நீங்கள் பிரிவில் இருந்து மீண்டு எழ பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பதை முதலில் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்களை புண்படுத்தும் எந்த உணர்வுகளையும் மதிக்க வேண்டாம்.
நீங்கள் அதை மதிக்கும் போது அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.
அந்த கோபமானது உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும்.
எனவே பிரேக்அப் ஏற்பட்ட பிறகு ஏற்படும் கோபத்தை சமாளிக்க நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த குடும்பத்தில் இருக்கும் ஒருத்தருடன் மனம் விட்டு பேசுங்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தை நினைத்து புலம்பிக் கொண்டு இருப்பது தேவையில்லாத ஒன்று. அதைப்பற்றி ஒரு போதும் சிந்திக்க வேண்டாம்.
நமக்கு ஏற்படும் பிரச்சினையில் இந்த சமூகமும் சரி, நம் உறவினர்களும் சரி, ஒரு சில நண்பர்களும் சரி நம்மை பற்றி குறை கூறுவது மனித இயல்பு.
உங்க காதலி உங்களைப் பற்றி தவறாக கூறுகிறார் என்பதற்காக குற்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
இது உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள தன்னம்பிக்கை குறைத்து விடும். எனவே குற்றவுணர்வை சுமப்பதற்கு பதிலாக இது எப்படி நடந்திருக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடந்துக்கொங்க.
காதல் பிரேக்அப் என்றால் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான். இருவரின் மேலேயும் தப்பு இருக்கலாம். எனவே நீங்கள் உங்க காதலி காதலன் மீதோ, காதலன் காதலி மீதோ பழியை சுமத்தாதீர்கள். இது ஒரு மோசமான நிலையை உங்களுக்கு ஏற்படுத்தி விடும்.
காதல் பிரேக் அப்பில் உங்கள் இருவருக்குள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லது. பின்னர் அதுவும் கடந்து போகும்.
உங்களுக்கு பிரேக்அப் ஏற்பட்ட பிறகும் வாழ்க்கை என்பது இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
பிரிந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கை என்பது நிற்காது. அதுவும் ஓடிக்கொண்டு தான் இருக்கும். எனவே நீங்கள் மற்றொரு நபரின் மீது கூட காதல் வயப்படலாம். காதல் வரலாம்.
ஆனால் இந்த உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றால் முந்தைய காதல் உறவை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். பிரிந்த காதல் உறவில் இருக்கிற அதே தப்பை நீங்கள் மறுபடியும் செய்யக் கூடாது.
எனவே பிரேக்அப் பிறகு உங்க காதல் உறவை மதிப்பீடு செய்து செய்த தவறை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இது அடுத்து வரும் உங்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்க மேம்படுத்தும்.
பிரேக்அப் உங்களுக்கு தனிமை, கோபம், அழுகை, வெறுப்பு போன்ற பலவித உணர்வுகளை கொடுத்துவிட்டுச் செல்லலாம்.
நிறைய பேர் இந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தற்கொலை போக்கு, கொலை போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
பிரேக்அப் மட்டுமே வாழ்க்கையின் முடிவல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களை நேசிக்க இன்னும் நிறைய பேர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிறைய பேர் தங்களுடைய காதல் பிரேக்அப் ஆன பிறகு தனிமையை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் முகத்தில் சிரிப்பு இல்லாமல் இதயம் ரணமான மாதிரி ஆகிவிடும். எல்லோருமே மனிதர்கள் தானே. மனங்களில் இருக்கும் கவலையை கொஞ்சம் இறக்கி விட்டு லேசாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் தான் சிரிப்பு, அன்பு மற்றும் பாராட்டு போன்ற விஷயங்கள் ஒரு மனிதனுக்கு தேவைப்படும். அதற்கு நீங்கள் தனிமையை தவிர்த்து உங்க நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம். இது உங்க மனதை ரிலாக்ஸ் ஆக்கும். வேதனையை குறைக்கும்.
அவர்கள் உங்களை மதிப்புமிக்கவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பார்கள். எனவே உங்க காதல் காயத்தை ஆற்ற அவர்களுடன் அதிக நேரம் பேசி செலவழியுங்கள்.
காதல் பிரேக்அப்பிற்கு பிறகு உங்க இதயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர விரும்பியதைச் செய்து மகிழ்ச்சியடையுங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளை செய்யுங்கள். இது உங்க மனதை காயத்திலிருந்து மற்றும் வலியிலிருந்து விலக்கிக் கொள்ள உதவும்,
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை கேளுங்கள். சோகத்தில் இருக்கும் போது சோகமான பாடல்களை கேட்பதை தவிர்த்து தத்துவமிக்க பாடல்களை அடிக்கடி கேட்டால் உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் மீதும் ஒரு தன்னம்பிக்கை வரும்.
வாழ்க்கையில் தோல்வியும் சரி, மகிழ்ச்சியும் சரி இரண்டுமே ஒரே நிலையில் இருக்காது. நேரத்திற்கு ஏற்ற வகையில் நம் மனதை பக்குவப்படுத்தி அந்த நிலைகளை கையாள நமக்கு தெரிந்து கொண்டால் இந்த உலகத்தில் நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க மாட்டாங்க.