அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது.
இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை மேற்கொண்டதுடன், 2 வாரம் செயற்கை சுவாச கருவியும் பொருத்தியுள்ளனர்.
குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டொலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை. குறித்த நோயாளி மருத்துவ காப்பீடு செய்திருந்ததால் இந்த பிரச்சினையை சமாளித்துள்ளார்.