மட்டக்களப்பில் மயிலந்தனை,மாதவனை எல்லையில் தமிழர்களின் காணி பிற மாவட்டத்தில் இருந்து வருபவர்களால் அபகரிக்கப்படுவதாக பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயும் நோக்கில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஆகியன நேரடியாக களம் இறங்கியுள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று காணிகளை அபகரிப்பதற்கு வருகை தருவதாக கிடைத்த தகவலை அடுத்தே அவர்கள் சம்பவ இடத்திற்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.