குற்றப் புலனாய்வப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதான அவர் குதிரைப் படைக்கு மாற்றப்படவிருந்த நிலையில், பிரதமரின் எதிர்ப்பினால் பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரசன்ன அல்விஸின் செயற்பாடுகளினால் அந்தத் திணைக்களத்தில் பணிபுரியும் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 08 அதிகாரிகள் தங்களுக்கு இடமாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தையும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சமர்பித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.