மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக பகிர முடியாத மிகப்பெரிய கோப்புக்களை பகிர்ந்துகொள்வதற்கு WeTransfer சேவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போதுள்ள லொக்டவுன் நிலையிலும் வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் உட்பட பல மில்லியன் கணக்கானவர்கள் இச் சேவையைப் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் இச் சேவையை தடைசெய்யுமாறு அனைத்து இணைய சேவை வழங்குனர்களிடமும் இந்திய அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.
முறையான காரணங்கள் எதுவும் இன்றி இக் கோரிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கையானது கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இந்தியாவின் Department of Telecommunications (DoT) இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை WeTransfer சேவையானது 2009 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டதாகும்.
இதன் மூலம் இலவசமாக 2GB வரையான கோப்புக்களையும், கட்டணம் செலுத்தி 20GB வரையான கோப்புக்களையும் பரிமாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.