அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் மனைவி, தன்னுடைய மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் ஒரு நல்ல மனிதர் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கண்கலங்கிய படி பேசியுள்ளார்.
கடந்த 25-ஆம் திகதி கருப்பினத்தவர் George Floyd பொலிசாரால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இது குறித்து அமெரிக்காவில் போராட்டம், வன்முறை வெடித்து வருகிறது.
இந்நிலையில், அவரின் மனைவியான Roxie Washington மற்றும் 6 வயது மகளான Gianna முதன் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, Roxie Washington அவர் ஒரு நல்ல மனிதர், எங்களுக்கு நீதி வேண்டும் என்று கண்கலங்கிய படியே பேசினார்.
Roxie Washington, mother of George Floyd's six-year-old daughter Gianna, breaks down as she speaks to the media pic.twitter.com/Z5znKTBBL6
— Reuters (@Reuters) June 2, 2020
தொடர்ந்து அவர் பேசுகையில், மகள் Gianna பிறந்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குழந்தையை அவர் அவ்வளவு நேசித்தார். அவள் அழுதாள் உடனே எழுந்துவிடுவார். மிகவும் நேசித்தார்.
வேலைக்காகவே அவர் Houston-ல் இருந்து Minnesota சென்றார். தூரத்திலிருந்தே குடும்பத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார். அவர் Minnesota-விற்கு சென்றதற்கு முக்கிய காரணம் வேலைக்காக மட்டுமே, அதிலும் அவர் லாரி வேலை செய்வதற்காக இருந்தார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்தனர். அதில் ஒருவரை தவிர மற்றவர்கள் ஏன் குற்றம் சாட்டப்படவில்லை, தொடர்ந்து நீதிக்காக போராடுவேன், எங்களுக்கு நீதி தேவை என்று கண்கலங்கினார்.
தொடர்ந்து அவர் Gianna, என்னிடம் டிவியில் ஏன் அப்பாவின் பெயரை ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்?அப்பா எப்படி இறந்தார் என்பதை அறிய விரும்பினாள். நான் அவளிடம் சொன்ன ஒரே விஷயம், அப்பாவால் சுவாசிக்க முடியவில்லை என்பது மட்டுமே என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பொலிசாரின் இந்த மிருகத்தனமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.