நாடளாவிய ரீதியில் நேற்று 10 மணி தொடக்கம் சனிக்கிழமை (06) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் காவல் அரண்கள் அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டிலிருந்தோ அல்லது தங்குமிடத்தில் இருந்தோ வெளியே செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.