பிரான்சில் புற்று நோய் காரணமாக 10,000 பேர் வரை பலியாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்துவதில் பிரான்ஸ் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் காரணமாக தற்போது வரை 151,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,021 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், புற்றுநோய் நோயாளிகளிற்குச் சிக்கிச்சை அளிக்காமல் போயுள்ளது.
இதனால் தற்போது பரிசோதனை செய்யும் போது, இருக்க வேண்டிய அளவை விட, மிகவும் அதிகமான நிலைக்கப் புற்றுநோய்த் தாக்கம் வளர்ந்துள்ளது என Lyon – Rône நகரத்தின் புற்றுநோயியல் மையமான Centre d’oncologie Léon Bérard தெரிவித்துள்ளது.
இதன் புற்றுநோயியல் பேராசிரியரான Pr Jean-Yves Blay, இதனால் 5, 000 முதல் 10.000 பேர் உயிரிழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா புற்றுநோயால் 40,000 பேர் வரை இறக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.