சீனாவில் பாடசாலை ஒன்றில் புகுந்த நபர் கத்தியால் தாக்கியதில் 40 சிறார்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதே பாடசாலையில் பணியாற்றிய காவலாளிகளில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
Guangxi Zhuang தன்னாட்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மட்டுமின்றி, தாக்குதலில் ஈடுபட்ட 50 வயது மதிக்கத்தக்க அந்த நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. துவக்க பாடசாலை என்பதால் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் சிறார்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.