ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் இளைஞர்கள் சிலர் மைதானம் ஒன்றில் விளையாடியுள்ளனர்.
அவர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிற்கு எதிராக பிறிதொரு தினத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுமென பொலிசார் தெரிவித்தனர்.