வௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து வரும் சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் குறித்த பி.சி.ஆர். பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் பி.சி.ஆர். பரிசோதனையை விமான நிலையத்தில் நிராகரித்து இன்று அதிகாலை நாட்டிற்குள் பிரவேசித்ததாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேற்படி விடயத்தை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த இராஜதந்திர அதிகாரி இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ தமக்கு அறிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.