இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 800ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை 858 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.