முல்லைத்தீவு – பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.