வட மாகாணத்தின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் பயிர்செய்கைகளில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெட்டுக்கிளிகள் ஓரிரு தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிபாளர் நாயகம், கலாநிதி W.M.W.வீரகோன் தெரிவித்தார்.
இதேவேளை குருநாகல் – மாவத்தகம பகுதியிலேயே வெட்டுக்கிளிகள் முதலில் அடையாளம் காணப்பட்டன.
சோளம், கொய்யா, வாழை, இறப்பர், தெங்கு உள்ளிட்ட செய்கைகளில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அடையாளம் காணப்பட்டால் அது குறித்து 1920 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.