“முஸ்லிம்களிடம் இருந்து மட்டக்களப்பு மண்ணைக் காப்பாற்றப் போகிறோம்” பிள்ளையானின் TMVP கட்சியினர் இன்று முன்வைக்கின்ற முக்கியமான கோசம் இதுவாகத்தான் இருக்கின்றது.
தமிர்களின் பூர்வீக நிலங்கள் முஸ்லிம்களிடம் பறிபோகாது காப்பாற்ற சேண்டும் என்றால், பிள்ளையான் தலைமையிலான TMVP கட்சிக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள் அந்தக் கட்சியினர்.
ஆனால், கட்டக்களப்பைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பின் பல பகுதிகளை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்தவர்கள் இந்த TMVP யினர.தாம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
தமிழர்களின் எதிரி கூடச் செய்யாத அளவிற்கு மட்டக்களப்பில் நில அபகரிப்பைச் செய்து, அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்களை முஸ்லிம் தரப்பிற்கு பெருந்தொகைப் பணத்திற்கு விற்பனை செய்த காரியத்தை இந்த ரீ.எம்.வி.பி. கட்சியினர்தான் செய்திருந்தார்கள் என்ற உண்மை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
TMVP கட்சியின் பொதுச் செய்லாளர் பு.பிரசாந்தன். ஆரையம்பதியில் இருந்த அரச காணிகளை ஹிஸ்புலலாவுக்கும், அவன் சார்ந்த காத்தான்குடி வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்தது இந்த பிரசாந்தன்தான் என்பதை ஆரையம்பதியில் உள்ள அனேகமானோர் அறிந்துள்ளார்கள்.
யார் இந்தப் பிரசாந்தன்?
1995 காலப்பகுதியில் ஆரையம்பதியில் விஷேட அதிரடிப்படை இருந்த காலத்தில் அவ்வூரின் தமிழீழ ஆதரவாளர் மற்றும் தமிழ்த் தேசியவாதிகளை அரச புலனாய்வாளர்களுக்கு காட்டிக் கொடுத்து, அவர்களுடைய மாதாந்த சம்பளத்தையும் பெற்று பிரபல்யமானவர்தான் இந்த பிரசாந்தன்.
பிரசாந்தன் என்றால் இளைஞர்களுக்கு பயம். ஏனென்றால் பிரசாந்தனுடன் பிரச்சனைப்பட்டால், மறு தினமே இரச புலனாய்வாளர்கள் வீடுதேடி வந்து அழைத்துச்சென்றுவிடுவார்கள்.
இதனைத் தொர்ந்து சுந்தரமூர்த்தி என்பவருடன் யூ என் பி கட்சியில் இணைந்து ஊரை தமிழ்த்தேசியத்திற்கு எதிராக மாற்றும் சதி வேலைகளில் ஈடுபட்டான் இந்தப் பிரசாந்தன்.
சுந்தரமூர்த்தி அவர்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அவரது கொலையின் சூத்திரதாரியாகவும் பிரசாந்தன் மாறியிருந்தான்.
பின்னர் தமிழ்த் தேசிய பற்றுமிக்க இளைஞர்களை அரச படைகளுடன் இணைந்து வேரறுக்கும்முயற்சிகளில் ஈடுபட்டான்.
2000.09.11 அன்றைய இரவு ஆரையம்பதியை உலுக்கிய தமிழத்தேசியப்பற்றுமிக்க கருணாகரன்இ ஸ்ரீகாந்த் இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரியானான் இந்த பிரசாந்தன்.
ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்த பிரசாந்தனையும், அவன் தம்பியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனது மைத்துனரான தமிழ்நாடு மனோகரன் வழங்கிய உத்தரவாதத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டான்.
விடுதலைப் புலிகள் அமைப்பினுள் கருணா பிரிவு இடம்பெற்றபோது, அரச படைகளுடன் இணைந்து தனது காட்டிக்கொடுப்புக்களை பகிரங்கமாகவே தொடர ஆரம்பித்தான்.
இடையேயான காலத்தில் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக தேர்தல்களில் உதவியதுடன். ஆரையம்பதி அரச காணிகளை அவனைக்கு அடையாளப்படுத்தினான்.
தமிழ்நாடு மனோகரன் என்பவர் அரையம்பதியில் மிகச் சிறந்த ஒரு தேசப்பற்றாளர்.
ஆரையம்பதியில் நிறைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர்.
ஆரையம்பதி பாரம்பரிய தமிழ் கிராமம் மீதான் ஹிஸ்புல்லாவின் அடாவடி ஆக்கிரமிப்பிற்கெதிராக பலமான குரலை நேரடியாகவே எழுப்பி வந்தார் இந்த தமிழ்நாடு மனோகரன். ஹிஸ்புல்லாவின் ஆலோசனையுடன் பணத்தை பெற்றுக் கொண்டு தன் உயிரை காப்பாற்றிய மைத்துனர் தமிழ்நாடு மனோகரனையும் அவர் மனைவியையும் 2008 மார்கழி காரிருளில் இரட்டைப் படுகொலை செய்து ஹிஸ்புல்லாவிற்கான ஆரையம்பதியின் ஆக்கிரமிப்பை இலகுவாக்கியவன் தான் இந்த ரீஎம்வீபி பிரசாந்தன்.
பின்னர் ஹிஸ்புல்லாவிற்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் உதவியுடன் கோவில்குளம் காசிலிங்கேஸ்வர் இருந்த இடம் கோவில்குளம் சேமக்காலை ஆரையம்பதியில் கடற்கரை அரசகாணிகள் என்பவற்றை பெரும் தொகை பணததுடன் தாரை வார்த்துக்கொணடுத்திருந்தான் இந்த ரீஎம்வீபி பிரசாந்தன்.
பகலில் ஆரையம்பதி பிரதான வீதியில் சிலை வைப்பது போன்றும் கடற்கரை எல்லை காக்க எல்லைச்சிவன் வைப்பது போன்றும் உலகநாச்சி அரசியின் சிலை வைப்பது போன்றும் நாடகமாடும் இந்த ரீஎம்வீபி பிரசாந்தனே, கடற்கரையும் உலகநாச்சி ஆண்ட இடத்தையும் பிள்ளையானின் அனுமதி ஆசியுடன் ஹிஸ்புல்லாவிற்கு தாரைவார்த்தான்.
பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சாராக இருந்த காலத்தில்தான் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோவில்குளம் உலகநாச்சியார் கோவில் பிரதேசம் முஸ்லிம்களின் கரங்களுக்குச் சென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊரை ஏமாற்ற சில படிப்பறிவில்லாத அடிதடி ஆட்களுடன் ஆற்றல்பேரவை எனும் அமைப்பை வேறு வைத்துக்ககொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான் இந்த ரீஎம்வீபி பிரசாந்தன்.
மக்கள் இவ்வாறான முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து தமிழ் பிரதேசங்களைக் கூறு போடும் துரோகிகளை அடையாம் கண்டுகொள்ளவேண்டும்.
பகலில் தமிழ் இனப்பற்றாளர்களாக தம்மை அடையாளம் காண்பித்து வாக்கு கேட்கும் இந்த ரீ;. எம்.வி.பி. தலைவர்கள் இரவில் தமிழ் இனத்தை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இரகசியமாக காட்டியும் கூட்டியும் கொடுக்கின்ற உண்மையை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துவைத்துள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.