உலகளவில் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. சுமார் 70 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேரிப்புறங்களும், மக்கள் தொகையும் அதிகமுள்ள இந்தியா, பிரேசிலில் கொரோனா தற்போதுதான் தீவிரமடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணி்க்கையில் சடுதியான உயர்வு இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
உலகளவில் பாதிக்கப்பட்ட 70 இலட்சம் மக்களில், 30 வீதமானவர்கள் அமெரிக்கர்கள். 15 வீதமானவர்கள் லத்தின் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள்.
இதுவரை கொரோனா தாக்கத்தினால் 402,049 பேர் உயிரிழந்துள்ளனர். 6,973,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,411,118 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேஸிலில் 910 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 35,957 ஆக உயர்ந்தது. 27,581 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 673,587.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் 35,930 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 672,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 112,096 ஆக உயர்ந்துள்ளது. 22,836 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 1,988,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிக்கோவில் நேற்று 625 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 13,170 ஆக உயர்ந்தது.