மெக்சிகோவில் 17 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொன்று, அவரது வயிற்றில் இருந்து குழந்தையை அகற்றிய பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு குழந்தைகள் இல்லையென ஊரார் திட்டுவதால், கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தையை எடுத்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிளேயா டெல் கார்மென் பொலிசார், 17 வயது யுவதியின் சடலத்தை மீட்ட நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண் கொலை செய்யப்பட்ட விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கல்லால் தலையில் தாக்கி கொன்று, பெண்ணின் வயிற்றை பிளந்து சந்தேக நபர் குழந்தையை வெளியே எடுத்துள்ளார் .
அதன்பின்னர், ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று, ஆண் குழந்தை தன்னுடையது என மருத்துவ சிகிச்சைக்குட்படுத்த முனைந்தார்.
எனினும், அக்குழந்தை 7 மாதத்திலேயே தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதால், குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அப்பெண்ணின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .