விழுப்புரத்தில் கணவர், இரண்டு பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனை தேடிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37), இவரது மனைவி ஆனந்தி (22). இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆனந்திக்கும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே ஒரு முகவரியை கொடுத்து அங்கு வருமாறு ஆனந்தியிடம் கூறியுள்ளார் கோவிந்தராஜ்.
இதை நம்பி ஆனந்தியும், பிள்ளைகள்- கணவரை தவிக்க விட்டு அந்த முகவரிக்கு சென்றுள்ளார்.
அங்கே இருந்தது கோவிந்தராஜின் தங்கை, அவரிடம் விவரத்தை கூற ஆனந்தியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார் .
பொலிசார் ஆனந்தியின் கணவருக்கு தகவல் அளித்ததுடன் எச்சரித்தும் அனுப்பியுள்ளனர், இதனை தொடர்ந்து ஆனந்தியை அவரது கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.