வீட்டு வேலை செய்யும் கருப்பரினத்தைச் சேர்ந்த தாயின் 5 வயது மகன் மிகுயெல் தா சில்வா என்ற குழந்தை 9 வது மாடியிலிருந்து விழுந்து இறந்ததையடுத்து பிரேசிலில் அமெரிக்கா போல் போராட்டம் வெடித்தது.
அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளொய்ட் என்ற கருப்பர் மீது பொலிஸார் ஒருவர் முழகாலால் கழுத்தில் வைத்து இறுக்கிக் கொன்றது பெரிய போராட்டங்களைக் கிளப்பியுள்ளது
இந்நிலையில் வெள்ளை எஜமானியம்மாள் வீட்டு நாயை நடைப்பயிற்சிக்காகக் கூட்டி சென்ற அந்தக் கருப்பரினத் தாயார் தன் மகனை தன் வெள்ளை இன எஜமானியிடம் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச் சென்றார்.
அப்போது லிஃப்டில் எஜமானி 5 வயது மிகுவெலிடம் பேசும் காட்சியும் ரொப் ப்ளோருக்கான பொத்தானை அழுத்தி விட்டு எஜமானி லிப்ட்டிலிருந்து வெளியேறிய காட்சியும், லிப்டில் குழந்தை தனியே விடப்பட்டதும், லிப்ட் நின்றவுடன் கதவு திறந்தவுடன் வெளியே வந்த 5 வயது குழந்தை ஜன்னலில் ஏறி பால்கனி தடுப்பையும் தாண்டி 9வது மாடியிலிருந்து விழுந்த காட்சியும் சிசிடிவி கமராவில் பதிவாகி பரவியது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. ரெசைப் என்ற நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நிறவெறிக்கு எதிரான போராட்டமாக அங்கு கிளம்ப “Vidas negras importam” அதாவது கருப்பரின மக்கள் வாழ்க்கையைப் பொருட்டாகக் கருதுங்கள் என்ற வாசகங்களுடன் பதாகை ஏந்தி மக்கள் சாலைகளில் இறங்கி போராடினர்.
5 வயது குழந்தையை லிப்டில் தனியாக விட்டுச் சென்றவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அங்கு எழுந்துள்ளன. ஆனால் தண்டனையிலிருந்து அந்த எஜமானி தப்பிவிடுவார் என்றே பலரும் கண்டனக் குரல்களை வலுப்படுத்தியுள்ளனர்.