எனக்கு திருமணமாகி ஒரு வாரம். பேச்சு திருமணம். திருமணமான அன்று முதலிரவில் நாம் உறவில் ஈடுபடவில்லை. உறவில் ஈடுபட முயன்றோம். ஆனால், கணவனால் முடியவில்லை. ஆனால், மறுநாள் உறவில் ஈடுபட்டோம். முதல்நாள் அவரால் உறவில் ஈடுபட முடியாதது எனக்கு உறுத்தலாக உள்ளது. அவருக்கு ஏதேனும் பிரச்சனையிருக்குமா?
டாக்டர் : தங்கை உங்கள் நீண்ட கடிதம் படித்ததில் நீங்கள் தேவையற்ற பல குழப்பங்களில் சிக்கியுள்ளது புரிகிறது. தேவையற்ற குழப்பம் தேவையில்லை.
முதல்நாள் ஒருவரை பார்க்கிறீர்கள். அவர் பேசவில்லை. மறுநாள் பார்க்கிறீர்கள் பேசுகிறார். இன்னொரு நாள் பேசவில்லை. இதற்காக அவர் வாய் பேச முடியாதவர் என்று அர்த்தமாகாது. அவர் பேசாததற்கு ஏதாவது புறக்காரணம் இருக்கலாம்.
அதுபோலத்தான் உங்கள் விவகாரமும். முதல் நாள் ஈடுபட முடியவில்லை, ஆனால் அடுத்த நாள் நன்றாக ஈடுபட முடிந்தது என்றால் அவரிடம் எந்தப் பிரச்னையுமே இல்லை.
திருமணத்துக்காக அதிகாலையில் கண் விழித்தது, நீண்ட நேரம் திருமணச் சடங்குகளில் ஈடுபட்டது, உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டது என்று திருமணத்தின் பல நிகழ்வுகள் அவருக்கு அசதியைக் கொடுத்திருக்கலாம். இதனால், உடல் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த சூழலில் அவருக்கு விருப்பம் இருந்தும்கூட அவரது இனப்பெருக்க உறுப்புக்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த நாள் சோர்வு நீங்கியதும், அவரால் இயல்பாகத் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிந்திருக்கிறது அவ்வளவே.
இது உங்கள் கணவரின் நிலை மட்டுமல்ல, பெரும்பாலான ஜோடிகளின் நிலை இதுதான். உங்களிற்கு ஒன்று தெரியுமா?, திருமணத்திலன்று- முதலிரவில் முழுமையான இன்பம் காண்பவர்கள் வெகு அரிதானவர்களே.
இல்லறமும் கிரிக்கெட் ஆட்டம் போலத்தான். களத்தில் இறங்கியதும் விளாச முடியாது. மெதுமெதுவாகத்தான் அடித்தாட முடியும். சந்தேகத்தை தவிர்த்து ஜமாயுங்கள்.
எந்த பொசிஷனில் உடலுறவு கொண்டால், குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்?
டாக்டர் : பெண் கீழே இருந்து, விந்தணு எளிதில் உள்ளே செல்லும் பொசிஷன் பரிந்துரைக்கப்படுகிறது. படுக்கையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் கூடுதலாக ஒரு தலையணையை வைத்து தாம்பத்திய உறவுகொள்ளும்போது, விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்குள் பாயும். உறவுகொண்டு குறைந்தது அரை மணி நேரத்துக்கு இந்த நிலையிலேயே பெண் இருக்க வேண்டும்.