அனைத்து மாவட்டங்களிற்குமிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை (8) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு வழங்கிய அறிவுறுத்தலின்படியே நாளை முதல் சேவைகள் நடைபெறும். பேருந்து, புகையிரதத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இருக்கைகளிற்கு அளவான பயணிகளே ஏற்றப்படுவார்கள்.
முன்னதாக, நாளையே இறுதி முடிவு எடுக்கப்படுமென சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்றே இறுதி முடிவு வெளியாகியுள்ளது.