கொழும்பு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சுமார் 250 நோயாளர்களின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கதிர்வீச்சு சிகிச்சை வழங்க பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ள காரணமாகவே இவ்வாறு கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சானக தர்மவிக்ரம மேலும் கூறியுள்ளார்.